சீனாவில் இருந்து  1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல்வேறு பொதுகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரிசி இறக்குமதிக்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.சீனாவில் இருந்து 1மில்லியன் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளாக குறிப்பிடப்பட்ட 1 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது.

எரிபொருள் கொள்வனவினை அடிப்படையாகக் கொண்டு மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய டொலரை விரைவாக செலுத்துமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மின்சாரத்தை தடையில்லாமல் விநியோகிக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பொது மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படுவதற்கு அரசியல்வாதிகள் முதலில் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டில் இருந்து 20 வருடத்திற்கு கடன் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கைவிடப்பட்டுள்ளது. குறித்த யோசனையில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் செல்லுபடியற்றதாகும் என்றார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com