உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட செலாவணி வீதத்திலும் பார்க்க, உயர் வீதத்தில் வெளிநாட்டு நாணய மாற்றம் செய்தமை குறித்து, இரண்டு தனியார் நாணய மாற்று நிறுவனங்களுக்கு மத்திய வங்கி, உடன் அமுலாகும் வகையில், எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு – 01 இல் தலைமையகத்தையும், கொழும்பு – 06 இல் கிளையையும் கொண்டுள்ள சுவிஸ் மணி எக்ஸ்சேஞ்ச் மற்றும் கொழும்பு – 06 இல் உள்ள வெஸ்ட்ரன் மணி எக்ஸ்சேஞ்ச் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாணய மாற்றுநர்கள், எச்சரிக்கை அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை சரி செய்யத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மத்திய வங்கி இடைநிறுத்த அல்லது மீளப்பெற நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com