நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள தாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. ஆனால் அவற்றுக் கான எரிபொருளைப் பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்கச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கி நடவடிக்கைகளே இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம்கள் செயற்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.
இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சில வங்கிகள் இரவு நேரங்களில் இயந்திரங்களை நிறுத்துவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட் டுள்ளது என்றும் அவர் கூறினார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com