இரணைமடுக்குளத்தின் உதவியுடன் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளத் திட்டம்!

சரியான நீர் முகாமைத்துவத்தை அடிப்படையாக கொண்டு இரணைமடுக்குளத்தின் உதவியுடன் 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிகளவான நிலப்பரப்புகளை கொண்ட விவசாயிகள் தங்கள் நீர் பங்குகளை அதிகரித்துத் தருமாறு கோரியிருந்தனர்.

இதற்கமைய மேலதிகமாக 426 ஏக்கர் நிலப்பரப்பு இந்த நடவடிக்கைக்காக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய தேவைகளையும் கணக்கிட்டு அதன்படியே விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில், தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்