பொதுவானவை

இரசாயன உர பாவனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய செயலணி

இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதேநேரம், தற்போது வரையில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரசாயன திரவியங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரியுள்ளா


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

Most Popular

To Top