இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு சிரமம்: விவசாய அமைச்சர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் அறிவிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித் துள்ளார்.

இந்தக் குறைபாடுகளால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டார்.

பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் நெல் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பசுமை விவசாயத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் யால பருவத்தில் இக்குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நேரத்தில் உரங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்