இந்தியாவில் வெப்பநிலையால் 15 பேர் உயிரிழப்பு!

வட மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பத்து இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இருந்து வெப்ப தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நாட்களில் இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதுடன் ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவது பிரச்னையாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்