ஆந்திர முதல்வர் இராஜினாமா!

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு எதிர்வரும் 09 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிகளில் 160 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்தி மோடி, சந்திரபாபு நாயுடுவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துத் தெரிவிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்