அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க, நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டு பல உயிர்காக்கும் மருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com