அரிசி, தேங்காயை தொகையாக கொள்வனவு செய்ய முடியாது

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர் களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை போலி வர்த்தகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது சதொச விற்பனை நிலையங்களில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 108 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 128 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சள் மற்றும் தேங்காய் ஆகியவை குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும், ஆனால் குறிப்பிட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கொள்முதல் செய்வதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏனைய அனைத்துப் பொருட்களும் சந்தை விலைகளை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், தனி நபர்கள் சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப் படும் அனைத்து பொருட்களுக்கும் அனுசரணை வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்