தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தாம் எதிர்நோக்கும் பின்னடைவுகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அதிக வருவாயினை பெற்றுதரும் ஏற்றுமதி அமைப்புக்கள் கோரியுள்ளன.
முன்னணி 6 ஏற்றுமதியாளர்கள் வருடாந்தம் பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் அமைப்புக்களுடன், மேலும் 17 அமைப்புக்களும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
தற்போது நாட்டில் உள்ள பிரச்சினை காரணமாக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான நிகழ்வொன்று அண்மையில் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது.
தேயிலை உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயந்த கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
வாரந்த தேயிலை ஏல விற்பனையையும் உரிய முறையில் மேற்கொள்ள முடியாதிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையினை, தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் பதப்படுத்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஏற்றுமதி செயற்பாடுகள், பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com