தெங்கு செய்கைக்கு அவசியமான அமோனியம் சல்பேற்றை, எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகத் தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (08) கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேயிலை செய்கைக்கு அமோனியம் சல்பேற்றை கொண்டுவர இடமளிப்பதைப் போன்று, தெங்கு செய்கைக்கும் அதனைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இன்றைய தினமும் உரம் மற்றும் கிருமிநாசினிகளைக் கோரி பல்வேறு பிரதேசங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )
Post Views: 38