அத்தியாவசிய மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையும்!

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னராக தெரிவித்திருந்தார்.

கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 100 நாட்கள் வரை செல்லும்.

அதுவரை இந்தியாவிலிருந்து கடன் வழங்குதலின் கீழ் மருந்து விநியோகம் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்