பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், ஏனைய சகல அத்தியாவசிய பொருட்களும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு இன்றைய தினம் கூடிய நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நிதியமைச்சில் குறித்த குழு முதல் முறையாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கூடியது.

இதன்போது, எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஆடை மற்றும் உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கத்தினால் வரிச் சலுகை வழங்கப்பட்ட போதிலும், அதன் பலன் மக்களை சென்றடையாமை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறு வர்த்தகர்கள் சிலர் அரசாங்கத்தின் சலுகையில் பெற்றுக்கொண்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com