அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 வீதத்தினால் அதிகரிப்பு

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தவறான தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இறுதியில் பல்பொருள் அங்காடிகளில் (சூப்பர்மாக்கெட்) 30 வீதத்தினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் இலங்கைக்கான பொதுக் கொள்கை யோசனைகளை முன்வைக்கும் சுயாதீன சிந்தனைக் குழுவான ‘அட்வகாட்டா’ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நட்பு நாடுகளிடம் எதிர்காலத்தில் கடன் கேட்டு செல்லும் வேளையில் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரை அழைத்துவருமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் நிலை ஏற்படும் எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கான பொதுக் கொள்கை யோசனைகளை முன்வைக்கும் சுயாதீன சிந்தனைக் குழுவாக செயற்படும் ‘அட்வகாட்டா’ நிறுவனத்தின் அவதானிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே ‘அட்வகாட்டா’ நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தஹநாத் பெர்னாண்டோ இவற்றை தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக கருப்பு சந்தையில் டொலருக்கான பெறுமதி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இன்றைய நிலவரப்படி கருப்பு சந்தையில் ஒரு டொலருக்கான ரூபாவின் பெறுமதியானது 240 ரூபாவில் இருந்து 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.

மேலும் சில காலத்திற்கு இந்த நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதே எமது அவதானிப்பாகும். அதேபோல் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வேளையில் சாதாரண மக்களுக்கே பாரிய தாக்கத்தை செலுத்தும். இப்போதே நாட்டில் உணவுத்தட்டுப்பாடு 22 வீமகாக காணப்படுகின்றது.

எனவே அடிமட்ட மக்களுக்கு உடனடியாக ஏதேனும் நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது. இல்லையேல் பட்டினி சாவுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தாக வேண்டும். இப்போதே அரசாங்கதின் கீழ் உள்ள 527 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டுள்ளன. அரசாங்கத்தினால் கொண்டுநடத்த முடியாத நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியாக வேண்டும். அரச தனியார் இணை அபிவிருத்தி வேலைத்திட்டங்களையாவது கையாள வேண்டும்.

அரச நிறுவனங்கள் அரச வங்கிகளில் கடன்களை பெற்றும் நட்டத்தில் இயங்குகின்ற காரணத்தினால் இறுதியாக மக்கள் மீதே சுமை இறக்கப்படுகின்றது. எனவே உடனடியாக இவற்றை தனியார் மயப்படுத்த வேண்டும்.

மிக முக்கியமான விடயமாக இலங்கை மத்திய வங்கியின் நிதி முகாமைத்துவம் மற்றும் அதன் சுயாதீனம் குறித்து பாரிய கேள்வி எழுந்துள்ளது.

திறைசேரிக்கு அளவுக்கு அதிகமான கடன்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த விடயங்களில் உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 30 வீதத்தால் பொருட்களின் விலை அதிகரிப்பை வெளிக்கட்டுகின்றது. மாதாந்தம் இதனை ஒப்பிட்டு பார்கையில் 10 வீதத்தினால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

எனவே இது சாதாரண மக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலைமையாகும். சந்தையில் பொருட்கள் இருந்தாலும் கூட அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அவதானம் உள்ளது. பொருட்கள் தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்படும் ஆனால் பல மடங்கு விலை அதிகரிக்கும்.

இது மிக மோசமான நிலையொன்று நாட்டில் உருவாக்கும். அதுவும் சாதாராண நாளாந்த வேலைகளை செய்யும் அப்பாவி மக்களையே அதிகமாக இது பாதிக்கப்போகின்றது.

நிதி நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல முன்னர் எம்மிடம் வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

நாம் என்ன செய்யப்போகின்றோம், எவ்வாறு நிலைமைகளை கையாளப்போகின்றோம் என்பதை நாமே உருவாக்கி சர்வதேச தரப்பிடம் முன்வைக்க வேண்டும்.

ஆனால் எம்மிடம் அவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றும் இல்லை. இந்த நிலை எங்கு சென்று முடியும் என்றால், எமது நட்பு நாடுகளிடம் எதிர்காலத்தில் கடன் கேட்டு செல்லும் வேளையில் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரை அழைத்துவருமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் நிலை ஏற்படும்.

ஆகவே அவ்வாறான நெருக்கடிக்குள் தள்ளப்பட முன்னர் எமக்கான வேலைத்திட்டமொன்று உருவாக்க வேண்டும் என்பதையே அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்