அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை நுகர்வோர் அதிகாரசபை கைது செய்கிறது!

நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1 கிலோகிராம் நாட்டு அரிசியின் விலை ரூபா 220/-, சம்பா அரிசி 1 கிலோகிராம் 230/- மற்றும் கீரி சம்பா அரிசி 1 கிலோகிராம் 260/- ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

விற்பனையாளர்களுக்கு தண்டனை

தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபா அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்