அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் வாநூர்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் வாநூர்தி சேவையும் ஒன்றாகும் என சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) தெரிவித்துள்ளது.

இதன் செயல்பாடு காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான காலப்பகுதியினில் கிட்டத்தட்ட 372 பில்லியன் ரூபா நட்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்டத்தில் இருந்து மீள்வதற்கு பல பரிந்துரைகள் அட்வகேற்றா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்