கடந்த நாட்களில் கோதுமை மா, சீனி, பருப்பு, மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது முட்டையொன்றின் விலையும் 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
கடந்தவாரம் முதல் வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 19 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும் மிக சமீபத்தில் 21 ரூபாவாக விலையுயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்சமயம் முட்டையொன்றின் விலை 4 ரூபா அதிகரித்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நுகர்வோர் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன், இதுதொடர்பில் கருத்து தெரிவித்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, கால்நடைகளுக்கான சோளம் உள்ளிட்ட தீவனப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் முட்டையின் விலையையும் அதிகரிக்க நேர்ந்ததாக தெரிவித்தார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com