நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அடகு வைத்த நகைகளை மீளப் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அடகு பிடிக்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நகைகளை அடகு வைக்க வருபவர்களுக்கு போதிய பணத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில அடகு பிடிக்கும் நிலையங்கள் ஒரு பவுண் தங்கத்துக்கு வழங்கும் கட்டணத்தை ஒரு லட்சம் ரூபா வரை குறைத்துள்ளன.
இதற்கு முன்னர் ஒரு பவுண் தங்க நகைக்கு 120,000 முதல் 140,000 ரூபா வரை வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தமையை அடுத்து நகைகளை அடகு வைக்க செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





