விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு தேசிய வேலைத்திட்டன் ஊடாக மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்திற்கு தேவையான பசளை மானியமாக வழங்கப்படவுள்ளது.

மரக்கறி, மஞ்சள், கிழங்கு ஆகியவற்றுக்கான விதைகளை மானியமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புக்களையும் ஏற்றுமதிகளையும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.