யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம்- கலட்டிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்