நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசின் பதில் வெளியானது!

தனது பதவி உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தான் அனுப்பிய நான்கு கடிதங்களுக்கும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என நீதிபதி இளஞ்செழியன் பிரித்தானியாவில் இடம்பற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க, நீதிபதி இளஞ்செழியனுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை எனவும் ஆனாலும் அவர் ஒரு நல்ல மனிதர் என அநுர அரசாங்கம் கூறலாம் எனவும் நாம் முன்னர் ஒரு செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கூறியிருந்தோம்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கான அணைத்து தகுதிகளும் நீதிபதி இளஞ்செழியனிடம் இருந்த போதிலும் அவரது பெயர் சூட்சுமமாக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என அப்போது பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது தனது தலைவிதி என கூறப்பட்டதாக இளஞ்செழியன் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி நல்லவர் எனவும் எங்கே தவறு நடந்தது என்பது தனக்கே தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறிருக்க, நீதிபதி இளஞ்செழியன் மிகவும் நல்லவர் எனவும் சூழ்நிலை காரணமாக அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்