கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் செய்கையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தற்பொழுது பச்சை மிளகாய் 60தொடக்கம் 70ரூபாய்க்கே கொள்வனவு செய்கின்ற நிலையில் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தற்பொழுது பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் […]

உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம்; மாவை

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் இன்று மே தினத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும், மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் […]

யாழ். புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் […]

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது. மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.