இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் […]

தமிழரசுக் கட்சியை காப்பாற்ற மும் மூர்த்திகள் பதவி விலக வேண்டும் – சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினரும், முல்லைத்தீவு கிளைத் தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (01.02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிததார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழரசுக் […]

டக்கிளஸ், கருணா, பிள்ளையானை மிஞ்சிய துரோகத்தினத்தின் உச்ச நிலை…

தமிழரசுக் கட்சிக்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தின் உச்சம் ! ! ! தந்தை செல்வா அவர்களால் ஆரம்பித்து தலைவர் பிரபா அவர்களால் வழிகாட்டபட்டு செயற்படும் தமிழரசுக் கட்சியிக்கு கடந்த வருடம் இதே நாளில் தமிழரின் தலைநகரில் வைத்து ஒரு சிறந்த தலைவனை வரலாறு அடையாளம் காட்டியது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாது சிங்கள தேசத்தின் எடுபிடியாக கொழும்பை மையப்படுத்திய கோடாரிக் காம்பு முதுகெலும்பில்லாத குள்ளநரி தனது பதவி வெறிக்காக தனது அடியாட்களை வைத்து தமிழரசுக் கட்சிக்கு தெரிவு […]

இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்; சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

பாராளுமன்றத்தில் சீனியோரிட்டி அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த சீனியோரிட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது பாராளுமன்ற மரபு. இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொடர்ச்சியாக நான்கு தடவைகளில் இரு […]

திருகோணமலை தமிழரசு மத்திய குழுவில் நடந்த விடயங்கள்! – எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது.

நேற்றைய தினம் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் தரப்பு நடைமுறைப்படுத்த எத்தனித்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்புக்கள் தெரிவித்தனர். பாராளுமன்ற குழு சர்வதேச தூதுவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தும் போது சுமந்திரனையும் அழைத்து செல்ல வேண்டும் என்று சாணக்கியன் ஒரு முன்மொழிவை கொண்டுவந்திருந்தார். ஆனால் அப்படி தேவையில்லை, பாராளுமன்ற குழுவை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் அழைத்தால் […]

தமிழினத்தை பாடையேற்றுவதற்கு முற்படுகிறார அன்னிய கைக்கூலி சாணக்கியன்?

பாரளமண்றக்குழுத்தலைவர் சி.சிறீதரன் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் பணியை சாணக்கியனுக்கு வழங்கியது யார் ???இன்றைய நாட்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகத்தின் உச்சகட்டத்தை நாம் கண்டு வருகிறோம். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சாணக்கியன் தனது இனத்துரோக அரசியலை அரங்கேற்றுவதற்கு தொடங்கியுள்ளார்தேர்தல் காலத்தில் வெள்ளாட்டு வேடமிட்ட சாணக்கியன் இப்போது தனது கறுப்பாட்டு தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இனத்தின் வாழ்வு எக்கதியானாலும் பறவாயில்லை நீதி, தர்மம் இவை எக்கதியானாலும் கவலையில்லை என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்துகிறார் சாணக்கியன். […]