அதிக வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கத்துறை!

இலங்கை சுங்கத்துறை (Srilankan Customs) செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது. குறித்த தகவல் இலங்கை சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது. சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க வருவாய் ரூ. 144.97 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரக மின்சார வாகனங்கள், முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை சுங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகளின்படி, சர்ச்சைக்குரிய வரி வேறுபாட்டை குறிக்கும் ரூ. 3.6 பில்லியன் தொகையை அரசுக்கு சொந்தமான வங்கி மூலம் வங்கி […]