எதிர்வரும் பதினெட்டாம் திகதி கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்!

எதிர்வரும் பதினெட்டாம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட கதவடைப்பு தொடர்பில் வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் வராது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வர்த்தகர் சங்கம் கதவடைப்புக்கு ஆதரவு தெரிவிக்காது எனவும் கடைகள் வழமை போன்று திறக்கப்படும் எனவும் வர்த்தகர் சங்க நிர்வாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் வர்த்தக சங்கம் மீளவும் ஆராய்ந்து முடிவை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் […]

தமிழரசு கட்சியிடம் இருந்து பறந்த உத்தரவு,ஹர்த்தலுக்கு ஆதரவு திரட்டுங்கள்!

எதிர்வரும் திங்கட்கிழமை (18) ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு தமிழரசு கட்சி தனது கட்சி உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர். எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதிய கடையடைப்பு (ஹர்த்தால்) தொடர்பானது எமது கட்சியினால் […]

எதிர்வரும் திங்கள் கிழமை (18) ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஏற்பட்ட நெருக்கடி, சுமந்திரனுக்கு ஏமாற்றம்!

எதிர்வரும் திங்கள் கிழமை (18) இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) ஹர்த்தால் மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை […]

வடக்கு – கிழக்கு முடங்குமா, வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தயார்!

தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது இருப்பை நிலைநாட்ட அவருக்கு ஒரு கதிரை தேவைப்படுவதாக ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார். கட்சியின் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என சுமந்திரன் தெரிவித்திருந்தாலும் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு சுமந்திரனையே ஆதரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் […]