இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள இரண்டு புதிய நீதிமன்றங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இரண்டு புதிய உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த விடயத்தை கூறியுள்ளது. தனயார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு ஒளிபரப்பான அரசியல் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிய நீதிமன்றங்கள் அடுத்த வாரத்திற்குள் செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய மற்றும் ரணில்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு!

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரா உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறினார்கள் என்று அவர்களுக்கு எதிரான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும், அதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரியே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதி மையம் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் […]
யாழ் நெல்லியடியில் சுவிஸ் நாட்டவரின் பணம் திருட்டு,08 பேர் விளக்கமறியலில்,ஐவர் தலைமறைவு!

சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில் , 75 இலட்ச ரூபாய் பணம் , 09 ஆயிரம் சுவிஸ் பிராங் , அதிநவீன […]
பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அறிக்கை!

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை பரிசீலனைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்களில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பலர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது […]
தாயுடன் தகாத தொடர்பு,மகள் கர்ப்பம்பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறை!

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி பூசாரியை குற்றவாளியாக இனங்கண்ட பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார, அந்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (08) விதித்தார். ஹொரணை, ஹிம்புட்டுஹேனவைச் சேர்ந்த கல்லுகே சுரங்க புஷ்பகுமார என்ற 44 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 500,000 இழப்பீடு வழங்கவும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் […]