உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய 7000 துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

கடந்த ஆண்டு உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய 7,000 க்கும் அதிகமான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2024 வரை 7,125 துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 182 இன் பிரிவு 29 (1) இன் கீழ், துப்பாக்கி உரிமையாளர்கள் உரிமம் காலாவதியான பத்து நாட்களுக்குள் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களை […]

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் உள்நுழைந்த போலி சட்டத்தரணி கைது!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த நபர் நேற்று (08.11.2025) சனிக்கிழமை ஓந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் ஒரு வீட்டிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், பின்னர் மீட்கப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறித்த தங்க நகைகளை மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் […]

இலங்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி,740 மில்லியன் கொள்ளையடித்துள்ள நபர்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ.740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹரகமவில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவருக்கே நவம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) எதிராக சுமார் 470 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. […]

யாழை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழில் பெண்ணொருவரின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தின் தடையுத்தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வழக்கிலக்கம் – AR/361/25, இவ்வழக்கில் வழக்குத்தொடுநரால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினையும் தாக்கல் செய்யப்பட்ட A அறிக்கை மற்றும் அணைக்கப்பட்ட கடிதத்தையும் ஆராய்ந்து பார்க்கின்ற போது, பூநகரி […]

வழக்கறிஞர்களின் நெறிமுறைகளை மீறியதற்காக சட்டத்தரணியின் உரிமத்தை இரத்து செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்!

வழக்கறிஞர்களின் நெறிமுறைகளை மீறியதற்காக கண்டியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் டபிள்யூ. எஸ்.எல்.எஸ். பாலிபன தாக்கல் செய்த புகாரை விசாரித்த பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மார்ச் 1, 2006 மற்றும் பெப்ரவரி 15, 2007 ஆகிய திகதிகளில் ஒரு வழக்கில் செயற்பட பிரதிவாதி, வழக்கறிஞரை நியமித்ததாகவும், சேவைக்காக ஒரு லட்சம் ரூபாய் கோரியதாகவும், அவருக்கு ரூ. 50,000 முன்பணம் […]

குழந்தையுடன் சென்று சொக்லேட் திருடிய இளம் தாய், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மாத்தறையில் உள்ள கடையொன்றில் சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 26 வயதுடைய பெண்ணும் 2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் மாத்தறை தலைமை நீதவான் சதுர […]

நாட்டில் பல பகுதிகளில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது!

பொலன்னறுவை, கதுருவலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கதுருவலை , ஹிஜ்ரா மாவத்தையைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். அவரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 51.68 கிராம் ஐஸ் போதைப்பொருளை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 17 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அவரிடம் இருந்து பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேவேளை, காத்தான்குடியில் போதைப்பொருள் […]