பொறுப்பற்ற முறையில் உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு!

மாத்தறையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையை மீறி சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் உத்தரவை மீறி கார் தொடர்ந்து பயணித்துள்ளது. இதன்போது ​​பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் இரண்டு […]

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த கார்!

யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இன்றையதினம்(05) கடலுக்குள் பாய்ந்துள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காருக்குள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

குருநாகல் (Kurunegala) – மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது குருநாகல் (Kurunegala) – மில்லாவா பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். […]

சொகுசு வாகனங்கள் – சட்டவிரோத இறக்குமதி: உடனடியாக கைது 

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வது மாத்திரமின்றி சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் […]

சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்!

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டதால், அந்தக் காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்தக் கடமை நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்றும், மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான சுற்றறிக்கையை […]