கனடாவுக்கு அனுப்பும் முகவர்கள், விசேட அதிரடிப்படையினரால் கைது..!

ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கனடா, ருமேனியா, கட்டார், மலேசியா நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து மோசடி: தமிழர்கள் இருவர் கைது

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவரை Durham பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் Ajax நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக […]