சென்னையில் பிக் பாஸ் வீட்டின் முன் போலீசார் குவிப்பு!

பிக் பாஸ் தமிழ் 9ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஷோ மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும், அதை தடை செய்யாவிட்டால் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டம் செய்யப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து இருந்தார். […]

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதனால் மீண்டும் ஷோ மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீக்லி டாஸ்க்கில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய போட்டியாளர்களை விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது. தீபக், பிரியங்கா, மஞ்சரி என முந்தைய சீசன் போட்டியாளர்கள் 3 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.