கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு சென்ற நடிகர் விஜய்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதோடு 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் மாத்திரம் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க […]

நடிகர் மர்ம மரணம்!

தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாகவும், இதனையடுத்து அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட பொலிஸார் இது இயற்கை மரணமா? அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணையை முன்னெடுத்து […]

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரபல தென்னிந்திய நடிகர்

தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டத்தில் நடாத்தப்பட சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். மக்களுக்கு சினிமாவும், சீரியலும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது ஆபத்தே?ஆனந்தமே? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றன.