இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. (S.Sritharan) இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
சிவஞானம் சிறீதரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா (India) பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக் குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா பயணமானார்.
இந்தப் பயணத்தில் இந்தியாவின் அரசியல், சமூகத் தலைவர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று தெரியவருகின்றது.
Post Views: 230





