மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
அதன்படி, தெரிவுக்குழுவை நியமிக்கும் திட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தெரிவுக்குழுவை நியமித்த பின்னர் எல்லை நிர்ணயத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து, தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இது வரை மாகாண சபை தேர்தலில் 50% தொகுதிவாரி மட்டத்திலும் 50% விகிதாசார முறையிலும் வாக்களிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஆர்வமுள்ள குழுக்களுடனும் கலந்துரையாடி ஜனநாயக ரீதியாக விரிவுபடுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தின் தரப்பில் இதுதான் எங்கள் கருத்து.கலந்துரையாடல்கள் மூலம் இறுதி முடிவு எட்டப்பட வேண்டும்.
இதற்கிடையில், நிறைவேற்றப்பட்ட புதிய மாகாண சபைச் சட்டத்தின்படி எல்லை நிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) கூறுகிறது.
அத்தகைய சூழலில், எல்லை நிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை வரை ஆகும் என்று PAFFREL இன் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.





