சிங்கள அமைப்புக்கள்  தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் கருத்துக்கு எதிர்ப்பு!

சிங்கள அமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு வெளியியிடப்பட்டுள்ளது.

அண்மையில் கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது கடும்போக்குடைய சிங்கள மற்றும் முஸ்லிம் அமைப்புக்களுக்கு ஒரே கணக்கிலிருந்து மக்களின் பணம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிங்கள அமைப்புக்கள் வேறும் நிறுவனமொன்றின் நிதியைக் கொண்டு இயங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல சிங்கள அமைப்புக்கள் பற்றி தமக்கு தெரியும் எனவும் அந்த அமைப்புக்கள் அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களினால் பங்களிப்புச் செய்யப்படும் நிதியைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த கணக்குகள் பற்றியும் அவற்றை எந்தெந்த அமைப்புக்கள் பெற்றுக்கொண்டன என்பது பற்றியும் தகவல்களை ஜனாதிபதி அம்பலப்படுத்தினால் அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் ஜனாதிபதி பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிடும் நபராக அடையாளப்படுத்த நேரிடும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்