2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 08.12.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 24.11.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post Views: 345





