யாழ். மாவட்டத்தில் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் அரசியற்கட்சிகளுடைய முக்கிய பொறுப்புகளில் இருக்ககூடியவர்கள் அல்லது முக்கிய பதவிகளில் இருக்ககூடியவர்களின் சகாவாக அல்லது உறவுகளாக உள்ளார்கள் என்ற தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு பலரது பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
பலர் குடும்பமாக போதைபொருள் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வடக்கில் ஆரம்பத்தில் ஹாவா குழு என்ற குழுவே பலகுற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர், தற்போது பல குழுக்கள் வடக்கில் உருவாகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
ஹாவா குழு உறுப்பினர் தற்போது இலங்கையில் இல்லையென்று கூறப்படுகின்றது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இயங்கும் வாள்வெட்டுக் குழுக்களுக்கான அதிகளவான பணம், உண்டியல் முறை மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.





