நாள்தோறும் 3 மணிநேரம் மின்வெட்டு

இன்று (16) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 3 மணித்தியாலம் மின் துண்டிப்பு அமுலாகிறது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய Aமுதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த வலயங்களில் இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர் […]
துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் இதனைத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன. தற்போது, தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக […]
பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு விளக்கம்

தமது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. தங்களது உற்பத்தி பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே தங்களது உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
தமிழில் தேசிய கீதம் – அமைச்சரவை அனுமதி!

தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதாக அவர் எமதுச் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]
தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்

வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முதலீடுகளை பெற தடை நீக்கப்பட்டதாக கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். 1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது. அண்மைய […]
சீன கப்பல் ஹம்பாந்தோட்டையில் வந்தடைந்துள்ளது

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது. இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை […]
அபான்ஸ், ஈவிஸ் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம்

அபான்ஸ் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட ஈவிஸ் நிறுவனமும் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இது இலத்திரனியல் உற்பத்திகள், கணனி மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமாகும். வரையறுக்கப்பட்ட ஈவிஸ் நிறுவனம் இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணனி உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்தநிலையில் குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், அந்நியச் செலாவணியை கனிசமான அளவு நாட்டின் உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]