நாணயநிதியத்துடான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகஸ்ட் மாத இறுதியில் சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
இலங்கை பயணத்தை புதுப்பித்தது பிரான்ஸ்

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக ‘அத்தியாவசிய பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது. தற்போது, குறித்த பரிந்துரையை, இலங்கைக்கான பயணத்தில் ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்றவாறு தளர்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. நாட்டில் பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை எதிர்வரும் 18, க்குப் பிறகு மேலும் நீடிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த மறுநாளில், பயண ஆலோசனையை […]
யூடியூப் தளங்கள் இந்திய அரசினால் முடக்கம்

எட்டு யூடியூப் தளங்களை இந்திய மத்திய அரசு இன்று முடக்கியது. முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அதன் உள்ளடக்கம் ஊடாக பணமும் ஈட்டப்பட்டு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய, ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் முடக்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்கள், இந்திய அரசால் மதக் கட்டமைப்புகளை சிதைத்தல், இந்தியாவில் மதப் போரைப் […]
வெளிநாட்டு நாணயங்களை விற்க, வைப்பிலிட பொது மன்னிப்பு காலம்

பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த சலுகை அறிவிக்கப்படடுள்ளது கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும். இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கில் குறித்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும். அத்துடன், உரிமம்பெற்ற […]
கைதுசெய்யப்பட்டார் மேர்வின் சில்வா

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி […]
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கீரீன்கார்ட்டிற்கு காத்திருக்கின்றார் அங்கு தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க பிரஜை என்பதால் முன்னாள் ஜனாதிபதி கிறீன்கார்ட்டிற்கு தகுதியானவர் அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர் என விடயங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் மேலதிக ஆவணங்களை தகவல்களை […]
யூரியா உரம் வழங்குவதற்கான ஒன்லைன் பதிவு ஆரம்பம்

பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022/23 பருவத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்ட அதே விலையில் அதாவது 50 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை […]