சவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை

நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபிய பிரஜை ஒருவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் நாளொன்றுக்கு 230 அமெரிக்க டொலர் செலவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]
வெட்கமடைந்த இலங்கை, ஏமாற்றமடைந்த இந்தியா, சிரித்த சீனா!

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கடற்படைக் கப்பல் வருகை தந்தமையானது. இலங்கையுடனான புதுடில்லியின் முடிவில்லாத இக்கட்டான நிலையை காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது. இதன்மூலம் இந்தியா முன்னர் இலங்கையுடன் மேற்கொண்ட ராஜதந்திரத்தின் ஆபத்துக்களில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுவதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் என்று அழைக்கப்படுவது இந்தியாவால் கூறப்படும் உளவுக் கப்பலாக இருக்கலாம். அப்படியிருந்தும், சீனக் கப்பலுக்கு எதிராக இலங்கைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பயன்படாது என்பதை […]
பிரித்தானிய: ரிஷி சுனக் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடியுள்ளதாக Tamil Guardian தெரிவித்துள்ளது. தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில் தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் […]
அத்தியாவசிய பொருட்களின் விலையில் வீழ்ச்சி! நுகர்வோருக்கு பயன் இல்லை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும்; இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை தற்போது 420 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 270 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் […]
அமெரிக்கத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடியதோடு, இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அமெரிக்க தூதுவர் – சஜித் பிரேமதாச இடையே முக்கிய சந்திப்பு! இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் […]
மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்க நடவடிக்கை

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும். பராமரிப்பு தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என […]
அரச அதிகாரிகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

அரச அதிகாரிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல்,அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் அரச பணியாளர்களுக்கு,குடியுரிமை இல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கில் பணத்தை அனுப்ப முறையான ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், மூன்று மாதங்களுக்கு […]