பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]
இலங்கையின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2022

கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் (17.0) அரையாண்டு அதிகரிப்பும் (4.6 சதவீதம்) 2021இன் அரையாண்டுப் பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரித்த போக்கின் வீழ்ச்சியைக் காண்பித்தன. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய […]
இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

சீனாவும், இந்தியாவும் இணைந்தால் ஆசிய சகாப்தம் நடக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் சுலலொங்கொன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ‘இந்து – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நோக்கு’ என்ற தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்திய பின்னர், எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எல்லையில் பீஜிங்கின் செயற்பாட்டுக்குப் பின்னர், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு ‘மிகவும் கடினமான கட்டத்தை’ கடந்து வருவதாகவும், இரு அண்டை நாடுகளும் கைகோர்க்க முடியாவிட்டால் […]
இலங்கையில் திருமணப் பதிவுகள் அதிகரிப்பு

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில், இலங்கையில் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 628 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிகமான திருமணப் பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,591 ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில், 17,300 திருமணங்களும், குருநாகல் மாவட்டத்தில் 12, 409 திருமணங்களும், […]
இலங்கைக்கு நிலக்கரி வழங்க முன்வந்துள்ள ரஷ்ய

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் இன்று 19 வரை மேன்முறையீடு செய்யலாம் என்றும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா தெரிவித்தார். ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக அவர் கூறினார். செப்டம்பர் 30 வரையான […]
எரிவாயு உள்ளிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. இந்தநிலையில், உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை விலை என்பன குறித்து அவதானம் செலுத்தி, எரிவாயு விலைக் கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அண்மைக் காலமாக, சீமெந்து, இரும்பு, வயர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் விற்பனை விலை ரூ. 368.70, வாங்கும் விலை ரூ. 357.33. இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com