இலங்கையின் கடன் வழங்குநர்களை ஒன்றிணைக்க ஜப்பான் தயார்!

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கையின் ஏனைய கடன் வழங்குநர் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும் இன்று அவர் தெரிவித்துள்ளார். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு, தமது பெரிய கடன் வழங்குநர் நாடுகளை ஒன்றிணைக்குமாறு ஜப்பானை இலங்கை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். […]

இலங்கையில் 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது

நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார். குருநாகல் பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரச சேவையிலுள்ள ஊழியர்களினால் விமர்சனங்கள் முன்வைக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அரசியலை போன்றே, அரச ஊழியர்களும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். நாம் பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதாக கூறிய அவர், அரச ஊழியர்கள் […]

எதிர்வரும் தினங்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி […]

கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, பொதிசெய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட உள்ளன. பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் […]

இலங்கைக்கு சீன கடன் மறுசீரமைப்புக்கு பதிலாக கையகப்படுத்தலா?

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்குப் பதிலாக சீனக் கடனைப் பயன்படுத்தி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என சீனதூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடரபில் எமது செய்தி பிரிவு சீன தூதரகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, கையகப்படுத்தல் தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைககு புறம்பானது என தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பது கடினம் என சீனா அறிவித்துள்ளதாகவும், தேவைப்பட்டால், சீனக் கடன் மூலமாக […]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு!

இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் […]

பாண் ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடும்

சந்தையில் ஏற்பட்டுள்ள கோதுமைமா தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலத்தில் பாண் ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பல வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளமையை […]