I.C.C கைது உத்தரவு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கவலை!

மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மற்றும் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச ரீதியிலான கைது உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்ற அச்சத்தால் இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளர். இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கவும் சர்வதேச கோர்ட்டு ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது. இதேநேரம் நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் பணியில் […]

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் அரச தலைவருடன் சந்திப்பு

அமெரிக்க விவசாய பணிமனையின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor) மற்றும் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) அரச தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அரச தலைவர் […]

ஆஸ்துமா நோய் தீவிரம்; நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி

உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் 10 வீதம் முதல் 15 வீதம் வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதிக்கிறது எனவும் அவர் கூறினார். ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கும். 95 வீதமான ஆஸ்துமா நோயாளிகளை […]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் யாழில் முன்னெடுப்பு!

தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தைசெல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை தந்தைசெல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர். இவ் நிகழ்வில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பணிமனை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புகளும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர். […]

கவனத்தை ஈர்த்துள்ள ஈரான் ஜனாதிபதியின் விஜயம்!

ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைத் தரவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் வருகைத் தரவுள்ளார். உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் […]

இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் பிரபலமான Nas Daily யூடியூப் தளமானது இலங்கை தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் “மிக அழகான ரயில் பயணம்” என்ற தலைப்போடு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=UxdfZVVRbC0 சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பிரகாரம் இலங்கை வந்த அவர், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 03 காணொளிகளை அவர் உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த காணொளி வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் பல ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் […]

கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!

இந்தியாவின் – தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சிறுமி கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கில்மிஷாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கில்மிஷா எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]