சாப்பாடு விஷயத்தில் கலாய்த்த வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்த பிரியங்கா! செம நோஸ்கட்

விஜய் டிவியில் குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்கி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது முந்தைய சீசன்களில் வழங்கப்பட்ட டாஸ்குகள் பற்றி வனிதா மற்றும் வித்யூலேகா ஆகியோர் பேசினார்கள். எல்லோரும் சமைத்து முடித்ததும் சாப்பாட்டை பிரியங்காவிடம் இருந்து பத்திரமா வெச்சுக்கோங்க, காலி செய்துவிடுவார் என வனிதா கலாய்த்து இருக்கிறார். “அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க” என கேட்டு பிரியங்கா அவருக்கு […]
அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

நடிகர் அஜித்தின் 53ம் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று தீனா படம் ரீரிலீஸ் ஆனது. வெளியாகி 23 வருடம் ஆகும் இந்த படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் அஜித் கெரியர் மட்டுமின்றி முருகதாஸ் கெரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. லைலா ஹீரோயினாக நடித்து இருந்தார். தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரஷாந்த் தான் என அவர் அப்பா தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் பிரஷாந்த் […]
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்!

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்கலாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு […]
யாழ். அச்சுவேலியில் சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் (02) நடத்தப்பட்டுள்ளது. பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் செய்கையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தற்பொழுது பச்சை மிளகாய் 60தொடக்கம் 70ரூபாய்க்கே கொள்வனவு செய்கின்ற நிலையில் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தற்பொழுது பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் […]
அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களால் தடுத்து நிறுத்தம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிக்க நான்காவது தடவையாக இன்று முயற்சி பொதுமக்களால் தடுத்து நிறுத்தம் முல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02.05.2024) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் ,கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும்,கிராம […]
உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம்; மாவை

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் இன்று மே தினத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும், மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் […]