யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரபல தென்னிந்திய நடிகர்

தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டத்தில் நடாத்தப்பட சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். மக்களுக்கு சினிமாவும், சீரியலும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது ஆபத்தே?ஆனந்தமே? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றன.

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் […]

மஹிந்த ராஜபக்ஷ மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் வெள்ளவத்தை மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் 15ஆம் திகதி கலைக்கப்படுமா…

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய மின்சாரச் சட்டத்தை ஜூன் முதல் வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதற்கு முன் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரே எந்தவொரு […]

ரணில், பசில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது. பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் சந்திப்பு இது. ஜனாதிபதித் […]

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து மோசடி: தமிழர்கள் இருவர் கைது

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவரை Durham பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் Ajax நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக […]

புதிய தொழிலை தொடங்கியுள்ள சினேகன் மற்றும் கன்னிகா

தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். முதல் பாடல் பெரிய ரீச் கொடுக்கவில்லை, அடுத்து 2001ம் ஆண்டு பாண்டவர் பூமி என்ற படத்தில் வந்த தோழா தோழா தோள் கொடு தோழா பாடல் இவருக்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. சாமி படத்தில் இடம்பெற்ற கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா போன்ற பாடல்கள் சினேகனுக்கு பெயர் வாங்கி கொடுக்க தொடர்ந்து […]