ரஜினி மகள் ஐஸ்வர்யா திடீர்னு எங்கு சென்றார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய ஆவண படத்திற்காக ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டிற்கு திடீரென சென்றுள்ள சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க நடிக்க, இரண்டாவது ஹீரோவாக விக்ராந்த் நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் […]

தனுஷிற்கு வழிவிட்ட கமல்..

கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றதாம். மிகப்பிரமாண்டமான முறையில் அப்பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் கமல் தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்தார். இதையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார் கமல். எனவே இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் கமல் எப்போது […]

விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!

படப்பிடிப்பிலும் சரி.. ஷூட்டிங் முடிந்த பின்னரும் சரி.. எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருந்தவர்தான் விஜயகாந்த். ஏனெனில் நட்புக்கு அவர் கொடுத்த முக்கியத்தும் அப்படி. அவர் எல்லோருடன் நன்றாக பழகினாலும் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர்தான். எந்த விழாவுக்கு போனாலும் இவர்கள் இல்லாமல் போகமாட்டார் விஜயகாந்த். அதேபோல் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் நேரம் செலவழித்தது அவர்களோடுதான். சீட்டு விளையாடுவது கூட அவர்களோடுதான். ஆனால், திருமணத்திற்கு பின் அந்த […]

மற்றுமொரு சாதனை தோனியின் வசமானது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியப் போட்டி தர்மசாலாவில் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் சென்னை அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு முன்பு 149 பிடியெடுப்புகளை தோனி எடுத்திருந்த நிலையில், நேற்றையப் போட்டியில் அவர் 150வது பிடியெடுப்பை எடுத்திருந்தார். இந்தப் பட்டியலில் 144 பிடியெடுப்புகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் […]

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இந்நாட்களில் அதிக கோடையாக இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற மசாலா பொருட்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அதிக காரம் நிறைந்த உணவுகள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இவை உடல் பருமன் மற்றும் கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகும். அதிக காஃபின் […]

ஒரே மாசத்துல 5 கிலோ உடல் எடையை குறைக்கணுமா?

உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை நிலையான மற்றும் ஆரோக்கியமான முறையில் அணுகுவது கட்டாயமாகும். எடை இழப்பு உத்திகளுக்கு தனிப்பட்ட பதில்கள் வேறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கு என்ன வேலை செய்கிறதோ மற்றொருவருக்கு அதே வழியில் செயல்படாது. உங்கள் உடலில் கவனம் செலுத்துங்கள், தேவைக்கேற்ப விஷயங்களை சரிசெய்ய […]

ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா?

கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக கண்களை நெருங்கும் பொருட்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் கண்களை சிமிட்டும் முறை ஒருவரது ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 17 முறை கண்களை சிமிட்டுவார்கள். ஆனால் ஒருவர் கண்களை இந்த அளவுக்கு […]