யாழில் இளம் பெண் துாக்கில் தொங்கி மரணம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 24 வயதான குகதாஸ் ரம்மியா இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். குறித்த யுவதியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்!

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டதால், அந்தக் காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்தக் கடமை நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்றும், மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான சுற்றறிக்கையை […]

இளையராஜா- வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதில்

இளையராஜா- வைரமுத்து தொடர்பான சர்ச்சை குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். படத்தில் வந்துள இதில், இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, ‘பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?’ என கேள்வி எழுப்பினார். இந நேற்று இரவு, ‘அரண்மனை4’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த குஷ்பு பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ‘அரண்மனை4’ படத வைரமுத்து- இளையராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டு குஷ்புவிடம் “இசை […]

மோசமான புகைப்படத்தை பகிர்ந்தது சமந்தா.

பிஸி நாயகியாக வலம்வந்த சமந்தாவின் சமீபத்திய ஸ்டோரி ஒன்று அவரால் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டு இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களா இப்படி என அதிர்ச்சியாக பேசி வருகின்றனர். தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கிலும் வெற்றி நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. எல்லா முன்னணி நடிகர்களும் ஜோடி போட்டார். பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. விவகாரத்துக்கு பின்னர் […]

சூப்பர் ஸ்டார் மறுத்ததால் ரூட்டை மாத்திய லைக்கா.

இந்தியன் 2 படம் முடிவடைந்து விட்டது ஒரே ஒரு பாட்டு மட்டும் மீதம் இருக்கிறது. அது மிகவும் பிரம்மாண்ட செலவில் எடுக்கப் போவதால் இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்காக கமலஹாசன் 10 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு கோலாகலமாக இந்த மாதத்தில் ஆடியோ லான்ச் வைக்கப் போகிறார்கள். அதற்காக பெரிய தலைக்கட்டு யாரை அழைப்பது என்று சங்கர் மற்றும் லைக்கா யோசித்து வருகின்றனர். அவர்கள் லிஸ்டில் ரஜினி பெயர்தான் முதலில் இடம் பெற்றுள்ளது. சூப்பர் […]

ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம்.

சன் டிவியில் ‘ரோஜா’ என்ற சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்த சீரியலாக இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த சீரியலுக்காக காத்திருந்த காலமெல்லாம் நடந்திருக்கிறது. இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்தவர் நல்கர் பிரியங்கா. இதுதான் அவர் நடித்த முதல் சீரியல். முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார் பிரியங்கா. இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று […]