தாலி கட்டும் முன்பே கசந்த திருமணம்

கர்நாடக மாநிலம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று(மே 6) நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் சோமவார்பேட்டை நகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மணமகன் வீட்டார் அந்த திருமண மண்டபத்திற்கு வந்தனர். மணமக்கள் மேடையில் இருந்த நிலையில், விருந்து நடைபெறும் இடத்தில் திடீரென தகராறு […]
உச்சத்தில் இருந்த நடிகை! அவரது வாழ்வில் கண்ணீர் வர வழைக்கும் உண்மையான நிகழ்வுகள்

தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சுஜாதா. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் சினிமாவுக்கு வந்த நடிகை சுஜாதாவை கடைசி காலத்தில் யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். மேலும் இவர் முதலில் 1971 ஆம் ஆண்டு தபஸ்வினி என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து நடிகை சுஜாதா எர்ணாகுளம் குளம் ஜங்சன் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் […]
இலங்கையில் மோசமான வானிலையால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைக் தெரிவித்தார் அத்துடன் சீரற்ற வானிலையினால் 2,313 குடும்பங்களைச் சேர்ந்த 23,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான நிதியை ஜனாதிபதி உடனடியாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . மேலும், இந்த அனர்த்தங்களின் பின்னர் ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பில் தாம் உடன் கவனம் […]
சாதனை படைத்த இரட்டையர்கள்.

வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் அம்பலாங்கொடை மாதம்ப தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரர்கள் வர்த்தகப்பிரிவில் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். பதுன் சம்பத் மற்றும் மிதுன் சம்பத் ஆகிய இரட்டை சகோதரர்களே திறமை சித்திகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களில் பதுன் சம்பத் பாடசாலையின் முதன்மை மாணவர் தலைவராகவும், மிதுன் சம்பத் துணை முதன்மை மாணவர் தலைவராகவும் உள்ளனர். இந்த இருவரில் பதுன் சம்பத் சாதாரண தர பரீட்சையில் 8 […]
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை!

அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க முடியாது எனத் தெரிவித்தார். எவரேனும் அதனை மாற்ற விரும்பினால் உடனடியாகச் சென்று அரசியலமைப்பை மாற்றுமாறு ஜனாதிபதி கூறினார். ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். […]
வெப்பதால் 24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரணஞ்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.
பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (02) […]