பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (02) […]

மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (02) எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. […]

இந்து மகளிர் கல்லூரி மாணவி யாழ். மாவட்டத்தில் முதல் நிலை.

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலை

கலைப்பிரிவில் யாழ் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தை பெற்று சாதனை!

வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார்

யாழ் மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம், தேசிய அளவில் 47 வது இடத்தை பெற்று சாதனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் கணித பிரிவில் முதலிடம், தேசிய அளவில் 47 வது இடத்தை பெற்றுள்ளார்.

உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள்: யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 3ஏ சித்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏபி சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி […]

புறக்கோட்டை பஸ் உள்ளே வெளிநாட்டுப் பெண்னின் கைப்பையை திருடிச்சென்ற நபர் களனி பிரதேசத்தில் பொலிஸாரால் கைது

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில், வெளிநாட்டுப் பெண் ஒருவரின் பயணப்பொதியினைத் திருடிச் சென்ற நபரை காவல்துறை கைது செய குறித்த நபர் களனி – பெத்தியகொடை பகுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  தொடருந்துப் போக்குவரத்துப் பாதிப்பு காரணமாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குறித்த பெண் பதுளை – எல்ல நோக்கி தனியார் பேருந்தில் ச இதன்போது, அவரது பயணப்பொதியை சந்தேக நபர் திருடிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.