மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல் மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் குறித்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் மொத்த நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தீர்மானித்திருந்தார். எவ்வாறாயினும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் […]
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது. டில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜெயசங்கர் […]
கல்லூரி மாணவி சகோதரனுடன் பலியான சோகம்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டா நாகமங்கலாவைச் சேர்ந்தவர் மதுமிதா(20). […]
ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் மறைந்த காதல் தம்பதி..

பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையிலும் கைகோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடி மலையேற்றத்தை மிகவும் விரும்புவார்கள். சில நாட்களுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலத்தில் மலையேற்றம் […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒன்றாக பலி.

கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கமாலி கோர்ட் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பினீஷ், அவரது மனைவி அனு மற்றும் அவர்களது குழந்தைகள் ஜாஸ்மின், ஜோஸ்னா ஆகியோர் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து […]
100 வயதில் காதலியைக் கரம்பிடித்த நபர்..

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர தீர செயல்கள் புரிந்தவரான ஹரால்ட் (Harold Terens), தனது 100ஆவது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீனை (Jeanne Swerlin) சனிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம் 8ஆம் திகதி, பிரான்சில் வைத்து திருமணம் செய்துகொண்டார். பிரான்சின் நார்மாண்டியிலுள்ள Carentan என்னும் நகரில், அந்நகர மேயரான Jean-Pierre Lhonneur, ஹரால்ட், ஜீன் திருமணத்தை நடத்திவைத்தார். இந்த வயதில் இவர்களுக்கு இதெல்லாம் தேவை என்று நினைப்பவர்களைப் பார்த்து, காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தான் […]
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை!

இலங்கையில் சில தினங்கள் முன் தங்கத்தின் விலை வரலாறுகாணாத அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதாவது யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (10) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 189,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4000 ரூபா குறைந்து காணப்படுகின்றது) 22 கரட் தங்கம் 173,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4500 ரூபா குறைந்து காணப்படுகின்றது) (கொழும்பு செட்டியார் தெருவிலும் இந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.) மற்றும் 18 கரட் […]